Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

எந்தாய்க்கு கசந்தது
இனித்தது எனக்கு.

எனக்கு கசந்தது
என் மகளுக்கு இனிக்கிறது.

பசிகள் மாறுகையில்
ருசிகளும் மாறும்.

——————————–

சின்னதாய் ஒரு குடில்.
அருகே ஒரு தென்னை.
கிளையில் தனியாய் நீலக்குயில்.
தூரமாய் ஒற்றை நிலா.
கால் நனைக்க அலையலையாய் கடல்.
கரடி பொம்மையுடன்
கரையில் நான்.

நான் வரைந்த ஒவியத்தைக் காண
இன்றேக்கேனும் சீக்கிரம் வருவாயா அப்பா?

——————————–

பேராசைதான்.

அருமையான அணிதான், இந்த உலக கோப்பையை வெல்லக்கூடிய தகுதிகளும் வீரர்களும் நிரம்பிய அணிதான். ஆனாலும் அவர்களின் தற்போதைய எந்த ஒரு விளையாட்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடும் விளையாட்டில் வரும் பரப்பரப்போ, தென் ஆப்பிரிக்கா-ஆஸி Semi final Tie match/தென் ஆப்பிரிக்கா-இலங்கையின் Super 8 match போல சுவாரசியமாகவோ  இல்லை. One - Sided ஆக இருந்து என்னைப் போன்ற சராசரி கிரிக்கெட் ரசிகனை வெறுப்பேற்றுகிறது. [ நம் அணி வெறுப்பேற்றியது பற்றி பேசிப் பயனில்லை].

இறுதிப்போட்டியில் அவர்கள் வென்றாலும் ஆச்சரியம் எதுவுமில்லை. தற்போதைய நிலவரப்படி எந்த அணியும் அவர்களை கிட்ட நெருங்க இயலா வண்ணம் அனைத்து வீரர்களும் அனைத்து துறைகளிலும் மின்னுகிறார்கள்.

ஆனாலும்….ஒரு சின்ன ஆசை.

Semi-Finalல் இலங்கை வென்று [ வெல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் ] Finalலில் ஆஸியை மோத வேண்டும். விட்டு கொடுக்காத அவர்களின் fighting spirit உடன் முரளி/மலிங்காவின் Magic மூலம் மீண்டும் பரப்பரப்பான சுவாரசியமான ஆட்டத்துடன் ஆஸியை வீழ்த்த வேண்டும். இதுவரை எந்த போட்டியிலும் (இந்த உலக கோப்பையில்) தோற்காத ஆஸி finalலில் தோற்க வேண்டும்.

கடந்த உலக கோப்பையின் final ஆட்டத்தை போல One sided ஆகாமலிருந்தால நான்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த கொண்டாடத்திற்கு ஒரு உயிர்ப்பு இருக்கும். அவ்வளவே!

ஆஸிக்கும் இலங்கைக்கும் Advance wishes!

 பி.கு 1: ஏன் NZ finalலுக்கு வரக்கூடாதா என நீங்கள் கேட்கலாம். ஆனாலும் NZயை விட இலங்கை நல்ல ஒரு fight back match தரும் என நம்புகிறேன்.

பி.கு 2: கிரிக்கெட் உலகின் “Run machine” எனப் பெயர் பெற்று இன்று “Run out” ஆகி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் Brian Lara விற்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

காதலுக்கு “தடா”

அவன் சிரித்தான். அவளும் புன்னகைத்தாள். விரைவில் காதலரானார்கள். ஒரு பொழுது கண்டிடின் கண்ணிமை படபடக்க ஜன்னலில் அவள். மொட்டை மாடிகளில் செவிட்டூமை மொழி பரிமாற்றம். ஊரார் ஊமை செவிடு என்ற நினைப்புடன் நினைவுகளின் தபால்கள்.

எத்தனை முறை அளந்தாலும் தீராத கடற்கரை மணல்கள். மடிமேல் உறக்கம். மனத்துள் கிறக்கம். கொஞ்சல்களுடன் தாலாட்டு. கெஞ்சல்களுடன் சீராட்டு. எத்தனை முறை தரிசித்தாலும் அலுக்காத முகங்கள். எத்தனை காலம் வரையோ…?. எதை எதையோ பேசும் அவர்கள், அவர்களை மறப்பர்.உணவு இறங்காது உணர்வும் உறங்காது. 

பணம் கரைய மனம் கரைபவர்களும் இங்கு உண்டு சிலர். தூண்டில்காரர்கள் சிலர். வணிகர்கள் சிலர். பசி கொண்டு வலையிட்டு புசிப்பவர் சிலர். உணர்வில் கலந்து உடல் வருத்த ஊழி அழியும் வரை உடனிருந்து உடன்கட்டை ஏறுபவர் சிலர்.

இருந்தும் இப்பொழுது விலை பேசப்படுகிறது. இவளைப் பிடித்தால் என்ன லாபம் ? இவளுள் என்னதான் நன்ன என கூறு போடப்படுகிறது. காதலர்களில் கசாப்பு வாசனை நீறி மிக்க நாளாகிவிட்டது. எதையாவது செய்ய வேண்டும் எனத் துடிக்கும் இளைஞர்களுக்கு தற்போது கிடைத்திருப்பது பிடித்திருப்பது - காதல் காதலோ காதல்!.

“உன்னால் என்னை காதல் செய்ய முடியுமா?” (அல்லது) “ நான் உன்னை காதல் செய்கிறேன்” - இளைஞர்களின் திருவாசகமிது. விளம்பரங்கள் கூட கொடுக்கலாம். வியாபாரம் அழகாகவே களை கட்டி விட்டது. “உங்கள் படம் ஓட வேண்டுமா ? வையுங்கள் இரண்டொரு காதல் ஜோடிகளை!  புரளவிடுங்கள் ! மழையில் ஓடவிடுங்கள்! முகங்களை முகரச் சொல்லுங்கள்! காதலியை மழையில் தொப்புள் காட்டச் சொல்லுங்கள்! முக்கியமாக அப்போழுது வெள்ளுடை இருக்கட்டும், கதையில்லாவிட்டால் கூட நல்ல சதையிருந்தால் போதும் உங்கள் படம் வெள்ளிவிழா காணும்!.

குறிக்கோளின்றி ஜன்னலோரம் அமர்ந்து நிதம் காலையில் நடைப்பயிலும் கல்லூரிப் பெண்ணுக்கு அம்பு விடுங்கள். நீங்கள் காதலர் ஆகாவிடினும் கவிஞராகவே ஆகலாம். 

காதலைப் பாடாத கவிஞனேயில்லை. அந்தளவு காதலில் வியாபார பசையுள்ளது. அவசரமாகச் சிற்றூண்டிக்கு பணம் வேண்டுமா ? எழுது காதலைப் பற்றி நாலு கவிதை!

எத்தனை முறை நீங்கள் மலர்களைப் பார்க்கிறீர்கள்? எத்தனை பேர் மலர்களை வைத்து காதலை வர்ணித்துள்ளார்கள்? இதோ! நான் மலர்கள் மூலம் காதலைக் கண்டிக்கிறேன். பூக்கின்றனவையில் மகரந்தங்களற்று தேனிழந்து உதிர்ந்து மண்ணில் சேறாகி மரணமடைகின்றன சில. தேனூறிய மகரந்தங்கள் ததும்பிய சில திருக்கோயிலுக்கும் போகின்றன. அமரராகிய மலர்களை யாரும் நினைப்பாரில்லை. “தெய்வப்பிரசாதம்” விருதுப்பெற்ற மலர்கள்தான் மனிதர்களால் மதிக்கப்படுகின்றன. காதலித்து புத்தி பேதலித்துச் சிற்சில இன்பங்களில் சுகம் காண முற்பட்டு புனித பந்தத்தை புண்ணாக்காய் நினையும் மாந்தார்கள் என்னைப் பொறுத்தவரை அமரராகிப் போன மலர்களே!

நீங்கள் இதிகாசங்களையும் கதைகளையும் உதாரணம் காட்டுவதை இனியாவது நிறுத்துங்கள்!. இலக்கிய காதல் வேறு, இன்றையக் காதல் வேறு!. சிவந்து கொழுத்திருந்தால் பணபலமிருந்தால் உங்களைக்கூட இன்று ஆயிரம் பேர் காதலிப்பர். திரையில் உலாவும் ஆணழகர்களை ஆராதித்து அமரராகும் யுவன் யுவதிகளின் கதைகள் நாம் அறிவதே.

காதலின் சின்னம் தாஜ்மகால்தான் ஒப்புக்கொள்கிறேன். மரணத்திற்குப்பின்னும் மனைவியை நேசித்த ஒருவனின் அன்பின் அடையாளமது. நான் அதை மதிக்கிறேன்.  ஆனால், இன்றைய யுவ உலகிற்கு தாஜ்மகால் தேவையில்லை. தியேட்டர் இருட்டும் படகு மறைவும் போதும்.

ஏ யுவனே! யுவதியே! காதலுக்கு “தடா” சொல்! உன்னையும் உன் குறிக்கோள்களையும் செல்லரிக்கும் அந்த உடம்பு பசி உனக்கு வேண்டாம். வேண்டாவே வேண்டாம்!. வெளியே வா அந்த புதைக்குழியிலிருந்து. உனக்கு உன் துணையைத் தேறும் பருவம் வரவில்லை. உன்னைக் காதலிக்க வேண்டாம் என்றுச் சொல்லவில்லை.

காதல் செய், உன் மனைவியிடம்!. காதல் செய், உன் அன்புக்குரியவர்களிடம்!. உன்னையே நீ காதல் செய்!. உன் தொழில் மேல் காதல் செய்!

உன்னைத் தேடி ஒருநாள் உனக்கெனவே ஒருவள் வருவாள்! அதுவரை காதலுக்கு “தடா” சொல்!

கல்லூரி மலருக்காக எழுதிய ஆண்டு: 1996. 

பிறந்து வளர்ந்து நன்றாக படித்து நாளைய உலகை வளப்படுத்த உருவாகிய முப்பத்திரண்டு உயிர்களையும் அவர்களின் கனவுகளையும் பொசுக்கிய இரக்கமில்லா வன்முறையே உனக்கு இறப்பேயில்லையா?

வாழ்க்கைச் சுவை

வாழ்க்கை விட்டு கொடுத்தலில் சுவைக்கிறது.

அவரவர் விட்டு கொடுக்கும் அளவைப் பொறுத்து சுவையிருக்கிறது.

சுவையான வாழ்க்கையை முடியமளவு சமைப்போம்….